கொஸ்கம சம்பவத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட பொது மக்களை அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வரும் வகையில் இரவு பகலாக திருத்த வேலைகள், மறுசீரமைப்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பல வீடுகளின் மீள்கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு ஏற்கனவே உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
மேலும், இச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டு பொரளுகொட விகாரையில் தங்கவைக்கப்பட்டிருந்த எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் நேற்று முந்தினம்(13) காலை தமது வீடுகளுக்கு மீள அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், கடற்படை வீரர்கள் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் ஆகியோர் இணைந்து கொஸ்கம பகுதியில் உள்ள சுமார் 941 கிணறுகளை சுத்தப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் இராணுவத்தினரால் முழுமையாக திருத்தியமைக்கப்பட்ட வீடுகளுக்கு 20 – 25 குடும்பங்கள் திரும்பியுள்ளனர். இதற்கு மேலதிகமாக, முழுமையாக அல்லது பகுதியாக பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு மாதாந்தந்தம் ரூ. 50,000.00 என மூன்று மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது.