கொட்டதெனியாவ சிறுமி சேயா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட மாணவன் சுரஞ்சன் பிரதீப் செனவிரட்ன, தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
நேற்று (04) தாக்கல் செய்து குறித்த மனுவில், பொலிஸார், தன்மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி, தன்னை கைது செய்து, கொடுமைப்படுத்தியதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ரூபா ஒரு கோடியினை நஷ்டஈடாக வழங்குமாறு கோரியுள்ளார்.
குறித்த மனு, வழக்கறிஞர் தீஷ்ய வேரகொடவின் ஊடாக உச்சநீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இம்மனுவின் பிரதிவாதிகளாக, கொட்டதெனியாவ பொலிஸ் பொறுப்பதிகாரி, பொலிஸ் மாஅதிபர், அரச வழக்கறிஞர் உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.