முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்யுமாறு தமிழ் அமைப்புகள் விடுத்த வேண்டுகோளை அமெரிக்கா மறுத்துள்ளது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கடந்த ஒரு வாரகாலமாக அமெரிக்காவில் தங்கியுள்ளார்.
மருத்துவ சிகிச்சைகளுக்காக அவர் அமெரிக்கா சென்றிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் அவரை அமெரிக்காவில் வைத்து கைது செய்ய வேண்டும் என்று ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு மற்றும் அமெரிக்க தமிழர் பேரவை என்பன அமெரிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருந்தன.
எனினும் அமெரிக்கா ரோமப் பிரகடனம் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடாமை, கோட்டாபயவுக்கு எதிராக சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படாமை ஆகிய விடயங்களை முன்வைத்து அமெரிக்கா இந்த வேண்டுகோளை மறுத்துள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.