Breaking
Sat. Jan 11th, 2025

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கோட்டைக்கல்லாறில் ஆறு மாத கால தையல் பயிற்சியை முடித்த யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு பொதுக் கட்டடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஜோன் லோகநாதன், மேலதிக இணைப்பாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின், இணைப்பாளர்களான திருமதி.ஜெ.மீனா, எஸ்.ஜெகன், எஸ்.கண்ணன், ஆலய நிருவாகிகள் உட்பட நலன் விரும்பிகள் கலந்து கொண்டனர்.


கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ஆறு மாத கால தையல் பயிற்சியை முடித்த பதினாறு யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டதுடன், யுவதிகளால் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை பிரதியமைச்சர் பார்வையிட்டது.

மேலும் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, இணைப்புச் செயலாளர் ஜோன் லோகநாதன், மேலதிக இணைப்பாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

-முர்ஷிட் கல்குடா-

Related Post