Breaking
Fri. Nov 15th, 2024

எந்த கார­ணத்­திற்­காக குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷவின் வீட்­டுக்கு போகின்­றனர் என நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

இரண்டு தனியார் பாது­காப்பு நிறு­வ­னங்கள், பாது­காப்பு தரப்­பி­னரின் ஆயு­தங்­களை பயன்­ப­டுத்­திய சம்­பவம் தொடர்­பாக விசா­ரணை நடத்த குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் முன்னாள் பாது­காப்புச் செய­லா­ளரின் வீட்­டுக்கு சென்­றுள்­ளனர்.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்ள அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க, பொலிஸார் விசா­ரணை நடத்தும் போது கோத்­த­பாய ராஜ­பக்­ ஷ­வுக்கு மாத்­திரம் விசேட சலுகை இருக்கக் கூடாது எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

சொத்து விப­ரங்­களை வெளி­யி­டு­மாறு கோத்­த­பாய ராஜ­பக்­ஷவுக்கு தான் விடுத்த சவா­லுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை எனவும் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.(vk)

Related Post