Breaking
Sun. Dec 22nd, 2024

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

காலி துறைமுகத்தில் அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்திற்கு சொந்தமான மிதக்கும் ஆயுத களஞ்சிய கப்பலை இயக்கியமை தொடர்பிலேயே இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post