Breaking
Fri. Nov 22nd, 2024
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஸவை கைது செய்ய சட்ட மா அதிபர் திணைக்களத்திடமிருந்து பணிப்புரை கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு ஊடகங்களும் கோத்தாபாய விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என்று செய்திகளை சூசகமாக தெரிவித்திருந்தன.

இந்தநிலையிலேயே, பொலிஸ் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள முக்கியஸ்தர்களுக்கான அறைகள் திருத்தப்படுவதாக வெளியான செய்திகளுடன் கோத்தாபாயவின் கைது விடயமும் பேசப்பட்டது.

எனினும், கோத்தாபாய விரைவில் கைது செய்யப்படுவதற்கான பணிப்புரை கிடைக்கவில்லை என பொலிஸ் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

By

Related Post