Breaking
Sun. Dec 22nd, 2024

ஐக்­கிய நாடுகள் சபையின் கலப்பு விசா­ர­ணையையும் சர்­வ­தேச நீதி­ப­தி­களையும் எதிர்ப்­ப தாக கூறிக் கொள்ளும் தேசப்­பற்­றாளர்கள் இலங்­கையில் நீதித்­துறைமீது நம்­பிக்­கை­யில்லை என்­கி­றார்கள். இதுவா இவர்­க­ளது தேசப்­பற்று என்று நீதி­ய­மைச்சர் விஜேய­தாஸ ராஜ­பக்ஷ நேற்று சபையில் கேள்வி எழுப்பினார்.

“எவன்கார்ட்” விவ­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை கைதுசெய்ய முடி­யாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற எவன்கார்ட் தொடர்­பான சபை ஒத்­திவைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே நீதி­ய­மைச்சர் விஜேய­தாஸ ராஜ­பக் ஷ மேற்கண்டவாறு தெரி­வித்தார்.

அமைச்சர் சபையில் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

சட்­டமா அதி­பரோ திணைக்­க­ளமோ எவன்கார்ட் நிறு­வ­ன­த்திற்கு சார்­பாக எந்­த­வித நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை. சட்­டமா அதிபர் நேர்­மை­யாக செயற்­ப­டுபவர். அவ­ருக்கு சுவிஸில் வங்கிக் கணக்கு இருப்பதாக கூறப் பட்டது. அங்கு சேமிப்பில் 6 சதமேனும் அவ ருக்கு இருப்­பதாக நிரூ­பித்தால் நான் பதவி வில­குவேன்.

எவன்கார்ட் நிறு­வ­னத்­திற்கு எதி­ராக வெடி­மருந்­துகள், கொள் கலன்கள் விவகாரம் தொடர்பில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் வழக்கு தொடர முடி­யாது என சட்­டமா அதிபர் திணைக்­களம் அறி­வி­த்தது. சட்­டமா அதி­பரும் தெரி­வித்தார்.

பொலிஸார் விசா­­ரித்து குற்­றங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டால் தான் குற்­ற­வியல் தண்­ட­னையின் கீழ் வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.எவன்கார்ட் மிதக்கும் கப்பல் ஐ.நா.பிர­க­ட­னங்­க­ளுக்கு அமை­யவே ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எனவே இதில் எவ்­வி­த­மான குற்ற வியல் காரணங்களும் கிடை­யாது.

ஐ.நா. விசா­ரணை, ஹைபிரிட் விசா­ரணை மற்றும் சர்­வ­தேச நீதி­ப­திகள் இங்கு வரு­வதை எதிர்ப்­ப­தாக கூறிக் கொண்டு தம்மை தேசப்­பற்றுள்ளவர்களாக காட்டிக் கொள்­பவர்கள் மறு­புறம் உள்­நாட்டு நீதித்­துறை மீது நம்­பிக்­கை­யில்லை என்றும் சட்டமா அதிபர் திணைக்களம் மீது நம்பிக்கையில்லை என்­கின்­றனர்.

இவ்­வாறு மாறு­பட்ட கருத்­துக்­களை வெளி­யி­டு­வதால் எமது நாட்­டுக்கே பிரச்­சி­னை­களை சந்­திக்க நேரிடும். சர்­வ­தேசம் எமது நாட்டைப் பற்றி எவ்­வாறு சிந்­திக்கும்.அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்ட போது நாம் அதனை சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கும் உயர்­நீ­தி­மன்­றத்­திற்கும் முன்­வைத்தோம்.
அமைச்­ச­ர­வையில் தலை­வ­ராக பிர­த­மரை பரிந்­துரை செய்தோம். ஆனால் எமது கருத்தை சட்­டமா அதிபர் திணைக்­களம், உயர் நீதி­மன்றம் என்பன நிரா­க­ரித்­தன. இதனை நாம் ஏற்றுக் கொண்டோம். எமக்கு நாட்டின் சட்­டத்­துறை மீது நம்­பிக்­கை­யுள்­ளது. அதனை மதிக்­கிறோம்.

எவன்கார்ட் விடயம் தொடர்பில் 3000 ஆவ­ணங்­களை ஆராய்ந்தே தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டன. சட்ட ரீதி­யா­கவே அனைத்தும் இடம்­பெற்­றன. நான் சட்­டத்­த­ரணி என்ற ரீதியில் இதனை அறிவேன். ஆனால் இது தொடர்பில் சட்­டமே தெரியாவர்கள் இது தொடர்பில் கருத்­துக்­களை வெ ளியி­டு­கின்­றனர்.

சிலர் இவ்­வி­ட­யத்தைப் பயன்­ப­டுத்தி கோத்­தா­பாய ராஜ­ப­க்ஷவை கைது செய்­வ­தற்­கான முயற்சி­களை முன்­னெ­டுத்­தனர். இதனை நான் எதிர்த்தேன். அவருடன் அர­சி­யல் ரீதி­யான கருத்து வேறு­பா­டுகள் இருக்­கலாம். ஆனால் சட்­டத்தின் பிர­காரம் சரி­யான தீர்­மா­னத்­தையே எடுக்க வேண்டும்.

இதனை நான் ஜனா­தி­ப­தி­யி­டமும், பிர­த­ம­ரி­டமும் தெளி­வு­ப­டுத்­தினேன். இதன்­போது இரு­வரும் சட்டத்தின் பிரகாரம் அனைத்தையும் மேற்கொள்ளுமாறு என்னிடம் தெரிவித்தனர்.

எமது ஆட்சியில் எவரையும் பழிவாங்கும் நோக்கமில்லை. கடந்த காலங்களில் நீதியில்லாத நிலைமை காணப்பட்ட நாட்டில் இன்று நீதியும் சட்டமும் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.. இதனை சீர்குலைக்க வேண்டாம் என்றார்.

By

Related Post