Breaking
Fri. Nov 15th, 2024

மத்திய வங்கி பிணை முறியுடன் தொடர்புடைய கோப் உபகுழு அறிக்கையை வெளியிட பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மத்திய வங்கி பிணை முறி தொடர்பில் சபாநாயகரின் பணிப்பில் கோப் உபகுழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையின் அறிக்கையை சபாநாயகருக்கு கையளிக்கும் முன்னர் பகிரங்கப்படுத்துவது சட்டவிரோத செயல் என்றும் அதற்கு தடை விதிக்குமாறும் கோரி பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை பரிசீலித்த மாவட்ட நீதிமன்றம் இன்றுவரை அறிக்கையை வெளியிட தடை விதித்திருந்தது.

நேற்றைய தினம் கருத்து தெரிவித்திருந்த சுஜீவ சேனசிங்க இடைக்கால தடை உத்தரவை அகற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

அதன்படி மனுதாரரான சுஜீவ சேனசிங்க இன்று தடை உத்தரவை வாபஸ் பெற்றுக் கொண்டதுடன் பிரதிவாதிகளுக்கு ஜூலை 30ம் திகதி பதில் அளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Post