Breaking
Mon. Nov 18th, 2024

கோரளைப்பற்று மத்தி,கோரளைப்பற்று மேற்கிற்கு உட்பட்ட பாடசாலைகள், தனியார் வகுப்புகள், கா.பொ.த உயர்தரம் ஆரம்பிப்பதற்கு முன்னர் உடனடியாக பிரத்தியேக வகுப்புகள் ஆரம்பிப்பதற்கு ஒரு மாதகால தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (2016.12.19) நடைபெற்ற அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பிரதேசவாதிகளும்,சமூக அமைப்புகளும்,அதிகாரிகளும் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக அபிவிருத்திக்குழுத் தலைவர் என்ற ரீதியில் இந்த தற்காலிக ஒரு மாதகால தடையினை பாடசாலைகளும்,தனியார் பிரத்தியேக கல்வி கூடங்களும் ஏற்று செயற்படுத்துமாறு கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் பணிப்புரை
விடுத்தார்.

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய மறு கணமே கா.பொ.த உயர்தர வகுப்பு ஆரம்பிப்பதென்பது மாணவர்களுக்கு சுமையானதாக இருக்கும்.

பிள்ளைகள் பெற்றோர்களோடும், ஆசிரியர்களோடும் கலந்து ஆலோசித்து பாடங்களை தெரிவு செய்வதற்க்கும், ஒருமாத காலம் சிறிய ஓய்வு ஒன்றினை பெற்றுக்கொள்ளும் பொருட்டும் இந்த ஏற்பாட்டினை செய்து தருமாறு கேட்டுக் கொண்டதற்கு அமைவாக இந்த வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக பிரதி அமைச்சர் தெரிவிக்கின்றார்.

By

Related Post