Breaking
Mon. Dec 23rd, 2024

கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேலைத்திட்டங்களை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு கடந்த 20.01.2017 ஆம் திகதி பிரதேச செயலக செயலாளர் ராகுலநாயகி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

கேனிநகர், வட்டவான், மாங்கேனி , பனிச்சங்கேனி , ஊரியண்கட்டு, அம்மத்தன்வெளி , பால்சேனை, புச்சாங்கேனி , கதிரவெளி, ஆகிய பிரதேச பிரிவுக்குட்பட்ட வேலைத்திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் 2016 ஆம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட முகம் வீதி புச்சாங்கேனி மற்றும் ஸ்ரீ நாகதம்பிரன் ஆலயத்தின் திருத்த வேலை ஆகியன மக்களிடம் கையளிக்கப்பட்டது.

16114256_1340563546005334_4126087502228700828_n 16174572_1340563502672005_2226205019279599796_n 16143057_1340563479338674_3669811231181921477_n 16195947_1340563466005342_6183884391550701151_n

By

Related Post