ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையில் 3 இலட்சத்து 90 ஆயிரத்து 69 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
பாடசாலையினூடாக 2 இலட்சத்து 36ஆயிரத்து 72 பேரும் தனிப்பட்ட ரீதியில் 72 ஆயிரத்து 997 பேரும் தோற்றவுள்ளனர்.
கடந்த வருடத்தை விடவும் இம்முறை சுமார் 12 ஆயிரம் பரீட்சார்த்திகள் அதிகமாக தோற்றவுள்ளனர் என்றும் பரீட்சைக்காக 2 ஆயிரத்து 180 பரீட்சை மத்திய நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, 2015 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான புதிய அட்டவணை www.doenets.lk இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் பார்வையிட முடியும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி பரீட்சை ஆரம்பமாகி 13ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் தொடர்ந்து 17ஆம் திகதி பொதுத் தேர்தலின் பின்னர் மீண்டும் 24ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் 8ஆம் திகதியுடன் நிறைவடையும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.