கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் ஆரம்பமாகும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு 3லட்சத்து 9ஆயிரத்து 69 மாணவர்கள் பரீட்சையில் தோற்றவுள்ளனர்.
2லட்சத்து 36ஆயிரத்து 72 பேர் பாடசாலை ரீதியாகவும்,72ஆயிரத்து 997 பேர் தனிப்பட்ட ரீதியிலும் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
நாடுபூராகவும்,2180 பரீட்சை மத்திய நிலையங்களும்,303 இணைப்பு மத்திய நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இம்முறை பரீட்சை கடமைகளில் 22ஆயிரம் பேர் ஈடுபடுவார்கள் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
பரீட்சையில் தோற்றவுள்ள அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை அனுமதி அட்டை,தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு என்பவற்றை தவறாது பரீட்சை நிலையத்துக்கு எடுத்து வருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தால் கேட்டுக் கொண்டுள்ளார்.