Breaking
Tue. Dec 24th, 2024

அஸ்ரப் ஏ சமத்

இலங்கை ஒலிபரப்புக் முஸ்லீம் சேவையின் ஆலோசகர் அகமத் முனவர் மற்றும் அவரது முஸ்லீம் கல்வி முற்போக்குச் சங்கத்தினால் 7ஆவது ஆண்டாக நாட்டின் நாலா பாகத்திலிருந்தும் 2013ஆம் ஆண்டில் க.பொ.த.சாதரத்தில் 9ஏ எடுத்த 265 முஸ்லீம் மாணவர்களுக்கு ருபா 9ஆயிரம் ருபா பணமும் சான்றிதழ், பாடசாலை உபகரணப் பொதிகள், பதக்கம் அணிவித்து கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ( 30/11/2014) கொழும்பு சாஹிராக் கல்லூரியில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக பேராசிரியர் றிஸ்வி சரீப், அமைச்சர் றிஷாத் பதியுதீன் கொழும்பு சாஹிராக் கல்லூரி அதிபர் சட்டத்தரணி றிஸ்வி மரிக்கார், பிகாஸ் நிறுவனத்தின் தலைவர் பொறியிலாளர் ரஹ்மான், மொளலவி எஸ்.எல். நவ்பர், அஸ்செய்யத் அப்துல் காதர் மசுர் மொளலானா, மலைய மக்கள் கல்வி முன்னேற்றச் சங்;கத்தின் தலைவர் ஆர். பாலசுப்றமணியம், மற்றும் இந் நிறுவனத்தின் அங்கத்தவர்கள் இந் சங்கத்திற்காக பொருள், பண உதவி வழங்கிய நன்கொடையாளர்கள் மற்றும் இம் மாணவர்களின் பெற்றோர்கள் என பெருந்திரளானவர்கள் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

48 47 42 34 44

Related Post