Breaking
Tue. Mar 18th, 2025

கொழும்பு மாவட்டத்தில்  க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின்  பெறுபேற்றை அதிகரிக்கும் வகையில், கொழும்பு மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட பிரத்தியேக வகுப்புக்களில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல்மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம்.பாயிஸ் கௌரவ அதிதியாகப் பங்கேற்றார்.

கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் அண்மையில்இ டம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம். ஹக்கீம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மாணவர்களின் கலை நிகழ்சிகள் இடம்பெற்றதுடன், ஆசிரியர்களினால் மாணவர்களுக்கான நினைவுச் சின்னங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Related Post