கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளிவரும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்ற இந்த பரீட்சையில் 6 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரீட்சாத்திகள் தோற்றியதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
மேலும் அதிகமான பரீட்சாத்திகள் தோற்றிய ஒரு பரீட்சையாக இந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை அமைந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் குறித்த பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் அனைத்தும் இந்த மாதம் 5 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக தெரிவித்துள்ள பரீட்சைகள் ஆணையாளர் ஏனைய வருடங்களைப் போலவே இந்த வருடமும் மார்ச் மாதம் இறுதியில் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான அனைத்து விடயங்களையும் பூர்த்தி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.