Breaking
Sun. Mar 16th, 2025

நாட்டில் இருந்த இனப்பிரச்சினையை தீர்த்து இனங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை மேற்கொள்ளவே இணக்க அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் 20 வருடங்கள் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு கட்சியை பாதுகாத்துவந்த ஆதரவாளர்களுக்கு சேவைசெய்யும் காலம் கனிந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம் நேற்று கம்பஹா மாவட்டத்தின் பியகம தேர்தல் தொகுதி மல்வான அல் முபாரக் தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

By

Related Post