Breaking
Mon. Dec 23rd, 2024

வருடாந்தம் நடைப்பெற்று வருகின்ற முரளி கிண்ணம் கிரிக்கெட் சுற்றுப் போட்டி2016ஆம் ஆண்டுக்கான ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி இரணைமடு நிலும்பியசவில்ஆரம்பமாகியது.

நேற்று மாலை (20) இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் தலைவரும், உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவருமான குமார் சங்ககார விஷேட அதிதியாக கலந்துகொண்டு குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

நாளைய தினம் கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ஒட்டுசுட்டான், மாங்குளம் போன்ற இடங்களில் நடைபெறவுள்ளது இப்போட்டியில் 23 அணிகளுக்கான போட்டிகள் ஆரம்பமாகும். இதில் மாங்குளம் மைதானத்தில் முரளி கிண்ணம் கிரிக்கெட்டின் பெண்களுக்கான போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி இராணுவக் கட்டளை அதிகாரி கிளிநொச்சிமுல்லைத்தீவிற்கான பொலிஸ் மா அதிபர் துடுப்பாட்ட அணிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

sa1 san

By

Related Post