Breaking
Tue. Dec 24th, 2024
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ள நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சங்கக்காரவுக்கு கௌரவமான பிரியாவிடை வழங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இதன் பிரகாரம் பி.சரவணமுத்து மைதானத்தில் நடைபெறும் இந்திய – இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியை கண்டுகளிக்க  இன்று வருகை தரவுள்ளார். பின்னர் பிரதமரின் தலைமையில் சங்கக்காரவுக்கு கௌரவமான பிரியாவிடை அளிக்கப்படவுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சங்கக்கார இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 12, 400 ஓட்டங்களும், ஒருநாள் போட்டிகளில் 14, 234 ஓட்டங்களும், இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளில் 1,382 ஓட்டங்களும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த நிலையில் விடைபெற எதிர்பார்த்திருந்த சங்கக்காரவின் கனவு நிறைவேறவில்லை. இரண்டாவது இன்னிங்சில் வெறும் 18 ஓட்டங்களுடன் அவர் ஆட்டமிழந்துள்ளார்.

Related Post