Breaking
Sat. Dec 21st, 2024
உலகப் புகழ்பெற்ற இந்தியாவின் நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் தெண்டுல்கர் யுனிசெப் நிறுவனத்தின் வைபவமொன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இலங்கையின் சிறுபராயத்தினரின் சுகாதாரப் பழக்கவழங்களை மேம்படுத்தல் மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்த வைபவம் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதிய அனுசரணையில் நேற்று ஆரம்பமானது.

இந்த வைபவத்தில் சச்சின் தெண்டுல்கருடன், இலங்கையின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனும் கலந்து கொண்டிருந்தார்.

யுனிசெப் அமைப்பின் சுகாதார மேம்பாட்டுத்திட்டத்தின் பிராந்திய நல்லெண்ணத் தூதுவராக சச்சின் தெண்டுல்கர் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post