Breaking
Fri. Jan 10th, 2025

அஸ்ரப் ஏ சமத்

வடக்கு கிழக்கு மலையகம் உள்ள சகல பிரதேசங்களும் எனது அமைச்சின் கீழ வருகின்ற வீடமைப்பு அபிவிருத்தி மற்றும் சமுா்த்தி திவிநகும சகல நடவடிக்கைகளும் சமமாக பங்கீட்டு அப்பிரதேச அபிவிருத்திகள் நடைபெறவேண்டும். என புதிய அமைச்சா் சஜித் பிரேமதாச கண்டிப்பான உத்தரவு. வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 24 மாவட்ட முகாமையாளா்கள், சமுா்த்தி அதிகார சபைகளின் சகல முகாமையாளா்களையும் நேற்று கொழும்பு புதிய நகர மண்டபத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனா்.

எனது அமைச்சின் கீழ் வருகின்ற எந்தவொரு அதிகாரியும் இனப்பாகுபாடு, அபிவிருத்தியில் சமதா்மம், இலஞ்சம், தாமதம் மக்களை அளக்கழித்தல், என்ற வகையில் எனக்கு முறைப்பாடுகள் கிடைப்பின் உடன் நடவடிக்கை எடுக்கப்படும். என்னோடு வேலைசெய்வதற்கு காலை 08 .30 பி.பகல் 04.30 என்ற அலுவலக நேரத்தை கடைப்பிடிக்க வேண்டாம். நேற்று இரவு நான் கடமையேற்று 11.30 இரவு 12.00 மணிவரையும் அமைச்சில் இருந்து மக்களை சந்தித்தேன். இன்று காலை 8 மணியுடன் உங்களை சந்திக்கின்றேன். மேலும் இன்று இரவு 10 மணிவரை அதிகாரிகளுடன் எதிா்நோக்கும் பிரச்சினைகள் செய்யவேண்டிய தீா்வுகள், கலந்துறையாடப்படும்.

Related Post