Breaking
Sun. Dec 22nd, 2024

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவிற்கு பெண் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பலப்பிட்டிய தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரான சஜின் வாஸ் குணவர்தனவை காலி மே தினக் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என அச்சுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் (30ம் திகதி) மாலை 6.15 அளவில் இடம்பெற்றுள்ளது. காலி கூட்டத்தில் பங்கேற்றால் கொலை செய்து விடுவதாக பெண் ஒருவர் சஜின் வாஸின் செல்லிடப் பேசிக்கு அழைப்பு ஒன்றை எடுத்து எச்சரித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சஜின் வாஸ் குணவர்தன இந்த சம்பவம் குறித்து அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாடு குறித்து பொலிஸார் சஜின் வாஸிடமும் வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்து கொண்டுள்ளனர்.

இந்த தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய பெண் அம்பலாங்கொடை ரன்தொம்பே என்னும் இடத்தைச் சேர்ந்தவர் எனவும், இந்தப் பெண் தற்போது தலைமறைவாகியுள்ளார் எனவும் பொலிஸார் நடத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

By

Related Post