Breaking
Mon. Dec 23rd, 2024

வெளிவிவகார கண்காணிப்புக்கான முன்னாள் அமைச்சர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் கிஹான் பிலபிடிய அறிவித்துள்ளார்.

சஜின் வாஸ் குணவர்தன சார்பில் சட்டத்தரணி அனுர பிரேமரத்ன நீதிமன்றத்திடம் முன்வைத்த வேண்டுகோளை பரிசீலனை செய்த பின்னர் அவர் இந்த அறிவிப்பை நீதிபதியிடம் வெளியிட்டுள்ளார்.

தனது சொத்துக்கள் தொடர்பான கணக்கு விபரங்களை வெளியிடாமை குறித்து இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குற்றம் சாட்டப்பட்டுள்ளவருக்கு எதிரான வழக்குடன் தொடர்புடைய பல்வேறு ஆவணங்கள் சபாநாயகர் அலுவலகத்திடமிருந்து வேண்டப்பட்டுள்ளதாகவும், இதனைப் பெற்றுக் கொள்வதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வழக்கு விசாரணையின் தினத்தை நீடிக்குமாறும் சட்டத்தரணி பிரேமரத்ன நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

By

Related Post