Breaking
Thu. Jan 16th, 2025
இலங்கை வெளிவிவகார சேவையைசாரத, அரசு தெரிவிப்பதற்கெல்லாம் தலையாட்டாத இராஜதந்திரிகளை வெளியேற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே பிரிட்டனிற்கான இலங்கை தூதுவர் கிறிஸ் நோனிஸ் மீதான தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ராஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
பிரிட்டன் தூதுவர் பதவவிலகியதாக வெளியான தகவல்கள் குறித்து விசாரித்து தெளிவுபடுத்தப்படுதல் அவசியம். ஏனெனில் இது இலங்கையின் சர்வதேச உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விடயம்.
அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்த வி;டயங்கள் இந்த விடயத்தில் குழப்பம் நிலவுவதை புலப்படுத்தியுள்ளன. மிகத் திறமையான , அரசின் தாளத்திற்கெல்லாம் ஆடாத  வெளிவிவகார சேவையைசாரத இராஜதந்திரிகளை வெளியேற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியே இது- இதன் பின்னால் இருப்பவர் வெளிவிவகார செயலாளர் சேனுகா செனிவரத்தின
கடந்த காலத்தில், தயான் ஜெயதிலக. தாமரா குணநாயகம், அசித பேரேரா, பாலித கோஹன போன்றவர்களை வெளியேற்றும் முயற்ச்சிகள் இடம்பெற்றன. ஆகவே அவர் தாக்கப்பட்டதற்கான காரணம் சுவாரஸ்யமானது.
 சஜின் வாஸ் குணவர்த்தனா தான் சேனுகாவை ஆட்டுவிக்கிறார் என்ற கருத்து காணப்படுகின்றது ஆனால் வெளிவிவாகர சேவையில் சகலரையும் ஆட்டுவிப்பவர் சேனுகாவே
இவ்வாறான ஆபத்தான சமிக்ஞைகள் தென்படுகின்ற போதிலும், ஜனாதிபதி வெளிவிவகார சேவையை சேனுகா வாஸ், பீரிசிடம் கையளித்துள்ளது, ஒப்படைத்துள்ளது கவலையளிக்கின்றது. நாட்டின் வெளிவிவகார சேவை அவர்களுடைய கைகளில் தொடர்ந்தும் காணப்பட்டால் நாடு தோல்வியை தழுவும் என அவர் தெரிவித்துள்ளார். Gtn

Related Post