சட்டக்கல்லூரி மாணவர்களின் பரீட்சைக்காக வழங்கப்படும் பரீட்சை வினாத்தாள் அரச மொழி கொள்கைக்கமைய மூன்று மொழிகளிலும் அச்சிடுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அந்த கொள்கை தற்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றும் நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.
பாராளுமன்றில் இன்று பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயக்கார கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இது தொடர்பில் அமைச்சு கிடைத்த முதல் வாரத்திலேயே நான் நடவடிக்கை எடுத்தேன். தற்போது அந்த கொள்கை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
2014ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு ஆங்கில மொழியில் மட்டும் வினாத்தாள் வழங்கப்பட்டமையினால், தமிழ், சிங்கள மாணவர்களுக்கு அநீதியும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.