மகிந்த சட்டத்திற்கு அமைய செயற்படும் நபர் அல்ல என நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
மகிந்த தேர்தலில் போட்டியிட முடியாது என எந்த வாதங்களை முன்வைத்தாலும் எந்த சட்டங்களை கொண்டு வந்தாலும் அவை செல்லுபடியாகாது.
மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவார். மகிந்த சட்டத்திற்கு அமைய செயற்படும் நபர் அல்ல என்பதே இதற்கு காரணம்.
நாம் இப்படியான பாசிசவாத சக்திகளை எதிர்க்க வேண்டும். இதனால் விமர்சன ரீதியான ஆதரவை நாங்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்குவோம் என அவர் சுட்டிக்காட்டியதுடன்
பாசிசவாதத்தில் இருந்து உடைந்து செல்ல போவதாக கூறும் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், பாசிசவாதத்தின் ஆசிரியர். இவர்கள் இல்லாமல் மகிந்த ராஜபக்ஷவுக்கு இந்த அரசியல் பயணத்தை மேற்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.