கெலும்பண்டார, யொஹான்பெரேரா
தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குகள் காரணமாக, அரசாங்கம் வருமானத்தை இழந்து வருகின்றது என்று, பொதுக்கணக்கு குழுவின் நாடாளுமன்ற கண்காணிப்புகுழு அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.
குறித்த அறிக்கை, குழுவின் தலைவர் பிரதியமைச்சர் லசந்த அலகியவண்ணவால் சமர்ப்பிக்கப்பட்டள்ளது.
ஒரு கணினி தரவு முறைமையைக் கொண்டு வந்து, இந்தக்குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய முடியும் என்று பொதுக்கணக்கு குழு பரிந்துரை செய்துள்ளது.
அரசாங்கத் திணைக்களம், உள்ளூராட்சி சபை உள்ளிட்ட அமைச்சுக்கள் அடங்களாக மொத்தம் 41 அரச நிறுவனங்களை உள்ளடக்கி இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஊழியர் சேமலாப நிதியத்தின் பிரகாரம், மத்திய வங்கி மற்றும் தொழிலாளர்துறை ஆகிய இரண்டுக்கும் இடையில் போதுமான ஒத்துழைப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.
அரச நிறுவனங்களில் பயன்படுத்துப்படும் தகவல்தொழில்நுட்பம் மிகக்குறைந்த அளவில் உள்ளதாகவும் சில திணைக்களத்தில் கோப்புக்களாக மாத்திரம் தகவல்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை ஒருமுறையில் வைப்பதில்லை என்றும் அந்தக்குழு தெரிவித்துள்ளது.