இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் சிதைந்து போன பாலஸ்தீனத்தின் காசா நகரை புதுப்பிக்க, 24 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என, பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது
ஜூலை 8ல் காசா பகுதியில் பயங்கர தாக்குதலை இஸ்ரேல் துவக்கியது. 50 நாட்கள் நடந்த தாக்குதலில், காசாவின் பெரும்பகுதி சிதைந்தது. பாலஸ்தீன மறுகட்டமைப்புக்காக நன்கொடையாளர்கள் மாநாடு, அக்., 12ல், எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடக்க உள்ளது. அதில், பாலஸ்தீனம் ரூ.24 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்க உள்ளது.