வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் புலிபாய்ந்தகல் பொண்டுகல்சேனை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் முப்பது முதுரை மரங்களை வட்டார வன இலாகா அதிகாரிகள் நேற்று (09) பிற்பகல் கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன இலாகா அதிகாரி என்.நடேசன் தெரிவித்தார்.
புலிபாந்தகல் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்கல் வெட்டப்படுவதாக வாழைச்சேனை வட்டார வன இலாகா அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து அவர்கள் நேற்று (09) புலியாந்தகல், மூக்கர்ரகல், பொண்டுகல்சேனை போன்ற பகுதிகளுக்கு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே பொண்டுகல்சேனை பகுதியில் இம் முதுரை மரக்குற்றிகள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் சந்தேக நபர்கள் தப்பிச்சென்று விட்டதாகவும் வட்டார வன இலாகா அதிகாரி என்.நடேசன் மேலும் தெரிவித்தார்.
இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை வட்டார வன இலாகா அதிகாரிகளுடன் வாழைச்சேனை பொலிஸாரும் இணைந்து சட்டவிரோத மரக்கடத்தல்காரர்கள் தொடர்பாக விசாரித்து வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.