நாம் எம்மை ஆள்பவர்கள் தொடர்பில் அக்கரையற்றவர்களாவே இருக்கின்றோம். யார், யாரோவெல்லாம் எம்மை ஆள்கின்றனர். சற்றேனும் சிந்திப்பதில்லை. எப்படி எம் சந்ததிகள் சீரிய பாதையில் பயணிப்பது. எம் சந்ததிக்கு நேரிய அரசியல் பாதையை தான் காட்டுகிறோமா? இவைகள் பற்றி இனியாவது சிந்தித்தேயாக வேண்டும்.
நாம் எதிர்காலத்தில் மிகப் பெரும் சவாலை எதிர் நோக்கியுள்ளோம். எமது என்ன உரிமையில் கை வைக்கப்படும் என அறியாதவர்களாகவும், அதற்கு எப்படி காய் நகர்த்தப்படும் என்றெல்லாம் விழிப்புடன் இருக்க வேண்டிய தேவையுடையவர்களாகவும் இருக்கின்றோம். அதற்கு பொருத்தமான பிரதிநிதிகளைத் தான் இம் முறையை தெரிவு செய்யப் போகிறோமா? இதுவரை ஏமாந்தவைகள் போதும். இனியாவது ஏமாறக் கூடாது.
நாம் பொருத்தமான வேட்பாளரை தெரிவு செய்ய, பொருத்தமான வேட்பாளர்களை கட்சிகள் களமிறக்கியிருக்க வேண்டும். அந்த வகையில் இம் முறை அ.இ.ம.கா தரமான வேட்பாளர்களை தங்களது கட்சியில் களமிறக்கியுள்ளது. இதனை யாரும் மறுத்திட முடியாது. அ.இ.ம.காவின் திகாமடுல்ல முதன்மை வேட்பாளராக சட்ட முதுமாணி வை.எல்.எஸ் ஹமீத் களமிறங்கியுள்ளார். ஒரு கட்சி களமிறக்கும் வேட்பாளர் கூட, அக் கட்சி, அம் மக்களை எவ்வாறானவர்களாக சிந்தித்து வைத்துள்ளது என்பதையும் அறிந்து கொள்ளச் செய்யும். மந்தை மேய்க்க முதுமாணியெல்லாம் பார்த்து களமிறக்க வேண்டிய அவசியமில்லையல்லவா?
வை.எல்.எஸ் ஹமீத் பற்றி கூறுவதாக இருந்தால், இவர் ஒரு சமூக சிந்தனையாளர். எந் நேரமும் சமூகம் எதிர் நோக்கும் ஆபத்துக்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிந்தனை கொண்டனர். அஷ்ரபின் அரசியல் பாசறையில் நேரடியாக அரசியல் பயின்றவர். தெளிவான பேச்சாற்றல் கொண்டவர். சட்ட அறிவு கொண்டவர். இன்னும் நிறைய கூறலாம். அண்மையில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட பிரச்சினையின் போது இவரது குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டுமென பலர் விரும்பியிருந்தனர். இப்படியான ஒருவரை முதன்மையாக கொண்டே இம் முறை அ.இ.ம.கா திகாமடுல்லவில் தேர்தல் களம் காண்கின்றது. ஏனைய கட்சி வேட்பாளர்களின் தகைமைகளை நீங்கள் ஒப்பீடு செய்து பாருங்கள். உண்மைகள் புரியும்.
இம் முறை அ.இ.ம.காவானது திகாமடுல்லவில் உயரிய அரசியல் கலாச்சாரத்தை வித்திட மக்கள் ஆணையை கோரியுள்ளது என்பதை குறித்த விடயம் துல்லியமாக்கின்றது. சிந்திப்போம்.. எம் சந்ததிகளுக்கு உயரிய அரசியல் கலாச்சாரத்தை அமைத்துக் கொடுப்போம்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.