ஈராக் முன்னாள் மாவீரன் சதாம் ஹுஸைனை தூக்கலிடபயன்படுத்திய தூக்கு கயிறு 70 லட்சம்வரை ஏலம் விடப்பட உள்ளது.
ஈராக் முன்னாள் அதிபரும் ராணுவ மாவீரன்யுமான சதாம் உசேன் மீது கடந்த 1982-ம் ஆண்டு முதல் ஆட்சி காலத்தில் பலரை இனப்படுகொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. தலைமறைவாக இருந்த சதாம் உசேன், அமெரிக்க, பிரிட்டன் கூட்டு படைகளால் கடந்த 2003-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
கோர்ட்டில் நடந்த விசாரணையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாக்தாத் சிறையில் தூக்கலிடப்பட்டார்.
இந்நிலையில் சதாமை தூக்கலிட பயன்படுத்தப்பட்ட தூக்கு கயிறு, கயிறு ஏலம் விடப்படதாகவும், இந்திய மதிப்பு ரூ. 70 லட்சம் வரை ஏலம் எடுக்க குவைத்தைச் சேர்ந்த இரு தொழிலதிபர்கள், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த செல்வந்தர் ஆகியோர் முன் வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.