– இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் –
சதொச மற்றும் லங்கா சதொச ஊடாக நுகர்வோருக்கு வழங்கப்படும் பொருட்கள் உரிய முறையில் தர நிர்ணயத்துக்குட்படுத்தப்பட்டது என தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் செயலாளர் டி.எம்.கே.பி.தென்னகோன் அரசாங்கத்தின் கீழுள்ள நிறுவனத்தினை பொறுப்பற்ற முறையில் விமர்சனம் செய்வதிலிலுந்து அதனை பாதுகாத்துக் கொள்வது அரச அதிகாரி என்ற வகையில் தமது பொறுப்பு என்றும் கூறினார்.
அண்மையில் மின்னேரிய பிரதேச அரிசி ஆலையில் மீள் சுத்திகரிப்புக்கு என கொண்டுவரப்பட்டிருந்து ஒரு தொகை அரிசியினை பொது சுகாதார பரிசோதகர்கள் சுற்றி வளைத்து அந்த ஆலையினை சீல் வைத்தது தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் செய்தியாளர்கைள தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம் பெற்றது.
கடந்த 2014 ஆண்டு அப்போதைய ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் கீழ் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 5 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி தொடர்பில் காணப்பட்ட அரசாங்கத்தின் வருமான இழப்பு தொடர்பில் நாம் அவதானத்தை செலுத்தினோம்.இந்த அரிசி மிகவும் விஞஞான ரீதியில் அமைக்கப்பட்ட களஞ்சிய சாலையில் வைக்கப்பட்டிருந்தது.
அதன் பிற்பாடு இந்த அரிசியினை சந்தைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தற்போதைய அரசு முன்னெடுத்துவந்தது.இதனடிப்படையில் உரிய டென்டர் முறை பின்பற்றப்பட்டு இந்த அரிசியினை விற்பனை செய்ய நடவடிக்கையெடுக்கப்பட்ட போதும்,வலை தொடர்பில் காணப்பட்ட முரண்பாடுகளினால் இதனை விநியோகிக்க முடியாத நிலையேற்பட்டது.வாழக்கை செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டு அதனைது அனுமதியின் பேரில் சதொச இந்த அரிசியினை கொள்வனவு செய்து அதனை லங்கா சதொச மற்றும் கூட்டுறவு கடைகள் மூலம் நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டது.
களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த இந்த அரிசி தொகையினை மீள துப்பரவு செய்து அவற்றை விற்பனை செய்யும் வகையில் அரிசி ஆலைக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் இவற்றை பொது சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர்.அவர்கள் அவர்களது பணியினை செய்துள்ளதாக கூறுகின்றனர்.நாங்கள் இந்த அரிசியினை மீளப் பெற்று அரசாங்கத்திற்கு ஏற்படும் நஷ்டயீட்டை தடுக்க வேண்டியது எனது பொறுப்பாகும்.
இந்த நிலையில் தற்போது கைப்பற்றப்பட்ட அரிசியானது மக்களுக்கு பாவணைக்கு உகந்தது என்ற உத்தரவாதத்தை தரவிரும்புகின்றேன் என்றும் அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.