– இர்ஷாத் றஹ்மத்துல்லா –
நுகர்வோருக்கு தேவையான பொருட்கள் சதொச விற்பனை நிலையங்களில் இல்லையென்ற முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று இரவு புத்தளம் நகரில் உள்ள சதொச விற்பனை நிலையத்துக்கு திடீரென சென்று அங்குள்ள பொருட்கள் தொடர்பில் நேரில் பார்வையிட்டதுடன்,பாவணையாளர்கள் கேட்கின்ற பொருட்களை வழங்க வேண்டிய நடவடிக்கைகளை எடுககுமாறும் ஊழியர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.
சதொச விற்பனை நிலையங்களை நவீன மயப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன் பாவனைக்குதவாத பொருட்கள் தொடர்பில் ஊழியர்கள் மிகவும்அவதானமாக இருக்க வேண்டும் என்றும்,நுகர்வோர்கள் கேட்கும் பொருட்கள் உரிய தரத்தில் அவர்களுக்கு வழங்க நடவடிக்கையெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான இந்த அரசாங்கத்தில் பொதுமக்கள் நலன்கள் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளதால் மக்களின் பிர்சினைகளை தீர்ப்பதில் தமது அமைச்சின் கீழ் வரும்,பல நோக்கு கூட்டுறவு கடைகள்,மற்றும் உணவு பாதுகாப்பு திணைக்களம்,நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இதன் போது கூறினார்.
அதே வேளை சதொச தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை வருகைத்தந்த அதிகாரிகளின் விபர அறிக்கையினையும் அமைச்சர் இங்கு இருந்து பெற்றுக் கொண்டார்.பொருட்களை கொள்வனவு செய்ய வருகைத்தந்திருந்த பாவணையாளர்களிடத்திலும் அமைச்சர் சதொசவின் சேவை தொடர்பில் கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.