Breaking
Sun. Dec 22nd, 2024

சனிகிரகத்தின் சந்திரனில் கடல் இருப்பதை நாசா விண்கலம் கண்டு பிடித்துள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளிக்கு அனுப்பிய ‘காசினி” என்ற விண்கலம் கிரகங்களையும், அவற்றின் சந்திரன்களையும் கண்டு பிடித்து படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சனிகிரகத்தின் ‘என்சி லாடஸ்” என்ற சந்திரனின் மிக அருகில் அதாவது 30 கி.மீட்டர் தொலைவில் தென்முனையில் சந்திரனின் அடிப்பகுதியில் உறைந்த நிலையில் நீராவி மற்றும் பல மூலக்கூறுகள் இருப்பதை படம் எடுத்து அனுப்பியுள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டில் ஆவிநிலையில் தண்ணீர் இருப்பதை படம் மூலம் அறிந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By

Related Post