தேசிய அரசாங்க கொள்கைகளுக்கு இணங்காத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிடும், ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் உறுப்பினர்களின் உறுப்புரிமை ரத்து செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அவர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார். தேசிய அரசாஙகம் அமைப்பதற்கு ஒரு சில உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.
பவித்ரா வன்னியாரச்சி, குமார வெல்கம மற்றும் டலஸ் அழப்பெரும போன்றவர்கள் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே ஆளும் தேசிய அரசாங்கம் பற்றி கருத்து வெளியிட அனுமதியளிக்கப்பட வேண்டுமென அவர்கள் கோரியிருந்தனர்.
எனினும், தேசிய அரசாங்கத்திற்கு ஆதவரளிக்காத தரப்பினர் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டுமென சந்திரிக்கா தெரிவித்துள்ளார். கட்சியின் புதிய பொருளாளரான எஸ்.பி. திஸாநாயக்கவும் இதேவிதமான கருத்தை வெளியிட்டிருந்தார்.