Breaking
Mon. Dec 23rd, 2024

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று  இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துள்ளார்.

இந்திய புதுடெல்லியில் நடைபெறுகின்ற சர்வதேச இந்து- பௌத்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சந்திரிக்கா அங்கு சென்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நேற்று ஆரம்பமாகிய இந்த மாநாடு 3 நாட்கள் நடைபெற்று நாளை நிறைவடையவுள்ளது.

இதேவேளை சந்திரிக்கா நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post