இலங்கைக்கு வந்துள்ள ஜப்பானின் முன்னாள் பிரதமர், யசுஒ புகுடா(Yasuo Fukuda), நேற்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை சந்தித்து உரையாடினார்
இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து தீர்க்கமாக ஆராயப்பட்டன.
இலங்கை அரசாங்கம் தற்போது மேற்கொள்கின்ற நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து சந்திரிகா குமாரதுங்க, ஜப்பானின் முன்னாள் பிரதமருக்கு விளக்கங்களை வழங்கினார்.
இந்தநிலையில் ஜப்பானின் முதலீட்டாளர்களை இலங்கைக்கு வரவழைக்கும் ஏற்பாடுகளுக்காக தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு சந்திரிக்காவுக்கு ஜப்பானின் முன்னாள் பிரதமர் அழைப்பு விடுத்தார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் புகுடா, ஜப்பான்- இலங்கை நட்புறவுச் சம்மேளனத்தின் நடைமுறைத்தலைவராக செயற்படுகிறார்.