இலங்கை மக்கள் அனைவரும் இன்று தென்படவுள்ள சந்திர கிரகணத்தை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகம் இன்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மக்கள் அனைவருக்கும் இன்று இரவு 10.24 முதல் நாளை அதிகாலை 2.23 மணி வரையில் சந்திர கிரகணம் தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான ஆய்வு பிரிவின் பேராசியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த சந்திர கிரகணத்தை அனைவரும் வெற்றுக் கண்களால் பார்வையிட முடியும் எனவும், இதனால் கண்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்பட மாட்டாது எனவும் அவர் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.