சபாநாயகர் கரு ஜயசூரிய பௌத்த பிக்குகள் மற்றும் புத்திஜீவிகள் அடங்கிய குழுவொன்றுடன் பாக்கிஸ்தானுக்கு ஒருவார சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்தக் குழுவில் முக்கிய விகாரைகளின் அதிபதிகள் மற்றும் பௌத்த புத்திஜீவிகளை கொண்ட 40 பேர் உள்ளடங்கியுள்ளனர்.
கோட்டே ஸ்ரீகல்யாணி தர்ம சபையின் பிரதம சங்க நாயக்கர் கலாநிதி இத்தேபான தம்மாலங்கார தேரர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிரதான சங்கநாயக்கர் திருகோணமலை ஆனந்த தேரர், அஸ்கிரி பீடத்தின் பிரதி பதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரர், மல்வத்து பீடத்தின் துணை மகாநாயக்கர் நியங்கொட விஜித தேரர், மகாபோதி சங்கத்தின் தலைவர் பானகல உபதிஸ்ஸ தேரர் ஆகியோரும் இந்தக்குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இக்குழுவினர் கடந்த 18ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதுடன் எதிர்வரும் 25ஆம் திகதி வரையான ஒருவாரகாலம் பாக்கிஸ்தானில் தங்கியிருந்து பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைப் பார்வையிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.