இரண்டு தமிழ் மாணவர்கள் கடந்த 9 ஆம் திகதியன்று பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டமை தொடர்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் தலைவர் ரசிந்து ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த புதன்கிழமையன்று இரண்டு மாணவர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
தம்மை தாமே காயப்படுத்திக் கொண்டதாக கூறி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்தே ஏனைய இரண்டு மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். இயல்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்த முயன்றனர் என்று குற்றச்சாட்டின் பேரிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
எனினும் இந்தக்குற்றச்சாட்டை தாம் மறுப்பதாக பல்கலைக்கழக மாணவர் தலைவர் தெரிவித்துள்ளார்.