சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் உபவேந்தரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் வருட மாணவர்களை பகிடிவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பில் வகுப்புத் தடைக்கு உள்ளான மாணவர்களுக்கு வகுப்புத் தடையினை நீக்கக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தரது அலுவலகத்தை மூடவிடாது நேற்று இரவு வரை இவர்களது ஆர்ப்பாட்டம் தொடர்ந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை வகுப்புத்தடைக்கு உள்ளான மாணவர்கள் பகிடிவதையில் ஈடுபட்டமைக்கான சான்றுகள் இருப்பதாகவும், இவர்களுக்கான வகுப்புத்தடை தற்காலிகமானது என்றும் எதிர்வரும் 23ஆம் திகதி இவர்களுக்கான ஒழுக்காற்று விசாரணைகள் இடம்பெறும் என்றும் நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் குறித்த மாணவர்கள் மீது பகிடிவதைக்கு எதிரான புதிய சட்டத்திற்கமையவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சந்தன உடவத்த ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.