Breaking
Wed. Jan 15th, 2025

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள அதி பெரும்பான்மையான கட்சி, அரசாங்கத்தை அமைக்கும் போது, சிறுபான்மைச் சமூகத்தின் இலட்சியங்கள் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

அதேபோன்று, சிறுபான்மைக் கட்சிகளின் நிலையும் பாரதூரமான ஒரு பள்ளத்தாக்கில் வீழ்ந்துவிடும் அபாயமும் இருக்கிறது.

அதி பெரும்பான்மை தேசிய கட்சிகளில் சேர்ந்திருக்கும் முஸ்லிம் பிரதிநிதிகள், சிறுபான்மைச் சமூகத்தின் குறிப்பாக, முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்குப் புறம்பான போக்கையே கடைப்பிடித்து வந்துள்ளனர். இப் பெரும்பான்மைக் கட்சிகள் ஆட்சிக்கு வந்து, பெரும்பான்மையினரின் எண்ணங்களுக்கு சார்பாகவே நடந்து கொண்டனர். இது வரலாறாகும். அத்தகைய பிரதிநிதிகளால் சிறுபான்மை மக்களின் பொறுப்புக்களை ஒருபோதும் செய்ய முடியாது என்பதை, நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆகவே, சிறுபான்மைச் சமூகம் இலங்கையில் தமது கௌரவத்தையும், உரிமைகளையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால், உத்தரவாதம் கூறும் உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்புவதுதான் ஒரே வழியாக தென்படுகிறது.

மலட்டுக் கௌரவத்தோடு நாடகம் நடித்துக்கொண்டு, இத் தேர்தலில் உங்களின் மூளைகளைச் சலவை செய்ய வரும் கடந்தகாலப் படிப்பினையாளர்களை நீங்கள் நன்றாக இனங்கண்டு, நமது சமூக உருவாக்கங்களுக்காக செயற்பட்டுக்கொண்டு, நமது உரிமைகளைக் காப்பாற்றிக்கொள்ள பாடுபட்டுக்கொண்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எனும் சிகரத்தை நோக்கி அண்ணாந்து பாருங்கள்.

அங்கு நீதியும், நியாயமும் உறைந்துபோய்க் கிடப்பதை…!

கவிஞர் கால்தீன்

Related Post