Breaking
Thu. Dec 26th, 2024

அஸ்ரப் ஏ சமத்

-சமுர்த்தி அதிகார சபை சேவையாற்றி ஓய்வூதியம் பெற உள்ளவர்கள் 8368 ஊழியர்களுக்கும் கொடுப்பணவுகள் முழுவதும் வழங்கப்பட உள்ளன-

சமுர்த்தி அதிகார சபையில் சேவை செய்த ஊழியர்கள் 8368 பேர் முந்திய அரசாங்கத்தின் காலத்தில் சுயமாக விலகி ஓய்வூதியக் கொடுப்பனவுகள் பெற்று சேவையில் இருந்து ஓய்வு பெறுவதாக சம்மதம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த ஒன்றரை வருடமாக அவர்களுக்கு எவ்வித கொடுப்பணவும் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் பல்வேறு மனித உரிமை நீதிமன்றம், ஊழியர் நீதிமன்றம் சென்று தமது வரப்பிரதசங்களுக்காக போராடி வருகின்றனர்.

இவ் ஊழியர்களது கொடுப்பணவுகள், சேவை அர முதல் 20வீதம் மற்றும் நலநோக்கு கொடுப்பணவுகளை, முன்னைய அரசாங்கம் இந்த அமைச்சுக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் இவ் நிதிகளை தேர்தல் காலத்திலும் வேறு தனிப்பட்ட தேவைகளுக்கும் செலவழிக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று வீடமைப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் சஜித் பிரேமததாச மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார். இம் மாநட்டில் சமுர்த்தி அலுவலகர்கள் ஓய்வூதியம் பெற சம்மதித்த சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அமைச்சர் சஜித் அங்கு மேலும் தெரிவித்தாவது –
இவ் ஊழியர்கள் சங்கம் நேற்று முன்தினம் என்னை சந்தித்தனர். தமது பிரச்சினைகளை என் முன் வைத்தனர். இதன் அடிப்படையில் சமுர்த்தி அதிகார சபையின் சகல உயர் அதிகாரிகள் மற்றும், திரைசேரியின் பிரதிநிதிகளுக்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தினேன். இவ் ஊழியர்களது கொடுப்பனவுகள் சம்பந்தமாக அதிகாரிகளிடம் வாதிட்டு வெற்றி கண்டதாகவும் அமைச்சர் சஜித் தெரிவித்தார்,

ஏதிர்வரும் பெப்பரவரி 28ஆம் திகதி மிகத் துரிதமாக சமுர்த்தி அதிகார சபை சேவையாற்றி ஓய்வூதியம் பெற உள்ளவர்கள் 8368 ஊழியர்களுக்கும் கொடுப்பணவுகள் முழுவதும் வழங்கப்பட உள்ளன.

ஓர் ஊழியர் ஆகக் குறைந்தது 10 -17 இலட்சம் ருபா அரச கொடுப்பணவுகளை பெற உள்ளனர். இவ் ஊழியர்கள் கடந்த 1994இல் இருந்து 2014வரை 20 வருடகால சேவையைப் பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது இதில் சமுர்த்தி அலுவகர்கள், இலிகிதர்கள், காரியாலய ஊழியர்கள் என பல்வேறு வகைப்பட்டனர் அடங்குகின்றனர்.

சமுர்த்தி அதிகார சபை ஊழியர்கள், திவிநகும, சமுர்த்தி வங்கி என 25ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். அத்துடன் 17 இலட்சம் சமுர்த்தி கொடுப்பனவு பெறும் வறுமைக் கோட்டில் வாழும் மக்கள் இந்த நாட்டில் உள்ளனர். இவர்களுக்குரிய 2500ருபா கொடுப்பனவையும் முன்னைய அரசாங்கம் கொள்ளையடித்துள்ளது.

அத்துடன் சமுர்த்தி கொடுப்பனவு பெறும் மக்களது சேமிப்புப் பணம் 7000மில்லியன் ருபா பணத்தினையும் கொள்ளையடித்துள்ளனர். இப் பணம் வேறு வியடங்களுக்கும் தேர்தல் காலத்தில் செலவழித்து;ள்ளமை தெரியவந்துள்ளது. அதனால் தான் மக்களுக்கும் தமது அமைச்சின் கீழ் உள்ள ஊழியர்களுக்கும் செய்த தீமைகளினால் அவர்கள் சாதாரண மக்கள் முன் முகம் கொடுக்க முடியாமல் நாட்டை விட்டு ஓடிப்போகி உள்ளனர்.

இந்த அமைச்சில் நான் ஓர் இரு மாதங்கள் இருந்தாலும் நாளை இந்த அமைச்சில் இல்லாமப் போனாலும் நான் சாதாரண மக்களோடு பாதையில் செல்லும்போது என்னைப் பார்த்து மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர் அல்லது ஊழியர்களை பழிவாங்கியவர் என்று சொல்லவதற்கு ஒருபோதும் செயல்பட மாட்டேன்.

அன்மையில் இந்த அமைச்சின் கீழ் 16300 பட்டதாரிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இந்த அமைச்சின் நடைமுறைப்படுத்தக் கூடிய வேலைத்திட்டங்கள் இல்லாவிட்டாலும் ஏனைய அமைச்சுக்களுக்கு இவர்களது சேவை தேவைப்படுமிடத்து விடுவிக்கப்படும் இல்லாத விடத்து அவர்களையும் இணைத்து திவிநகும சமுர்த்தி திட்டத்தின் வேலைகளை நடைமுறைப்படுத்தப்படும் என குறிபிட்டார்.

Related Post