‘திவிநெகும (வாழ்வின் எழுச்சி) திணைக்களத்தினை நிறுவுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எவ்வளவு தடைகள் இருந்த போதிலும் அதன் நடவடிக்கைளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ இறுதியில் வெற்றி கண்டு அதனை அமைத்தனர். திவிநெகும ஒரு அபிவிருத்தி திணைக்களம். நிர்வாக அமைப்பு முறைமை இன்றி உத்தியோகபூர்வ இல்லாமல் இயங்கும் இலங்கையின் பொதுப்பணி துறையான இவ் திவிநெகுமவின் நடவடிக்கை சமூக மக்கள் அலுவலர்களால் நிர்வகிக்கப்பட்டதை தொடர்ந்து அது வெற்றியளிக்கப்பட்டது’
திவிநெகும (வாழ்வின் எழுச்சி) தேசிய வேலைத் திட்டத்தின் ஆறாம் கட்டத்தினை முன்னிட்டு மன்னார் அடம்பன் சமூக ஆதரவு நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
100 க்கும் மேற்பட்ட பொதுசனங்கள் மற்றும் மாந்தை பிரதேச செயலகத்தின் அரசாங்க அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மரம் நடுதல் மூலம் திவிநெகும வெளியீட்டு நிகழ்வு தொடங்கப்பட்டது. அதன்பின், அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து கோழி குஞ்சு மரக்கறி கன்றுகள் உள்ளிட்டபல்வேறு வாழ்வாதார உதவிகளை திவிநெகும பயனாளிகள் பெற்றுக்கொண்டனர்.
திவிநெகும நிகழ்வு குறித்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிக்ககையில்:
திவிநெகும தேசிய வேலைத் திட்டத்தின் ஆறாம் கட்டம் கடந்த திங்கட் கிழமை (20) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் ஆரம்பமானது.
‘வளம் நிறைந்த இல்லம் சுபீட்சமான தாய்நாடு’ என்ற தொனிப்பொருளிலான இவ்வேலைத் திட்டத்தின் ஊடாக குடும்பங்களினது பொருளாதாரத்தையும், போஷாக்கு மட்டத்தையும் மேம்படுத்தி 25 லட்சம் குடும்பங்களை வலுப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
பொருளாதார அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படும் இவ்வேலைத் திட்டம் நாட்டிலுள்ள 331 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள 14022 கிராம சேவகர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டன
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் குடும்பங்களுக்கு 7 வகைகளை உள்ளடக்கிய மரக்கறி விதைப் பொதிகளும், நான்கு வகைகளை உள்ளடக்கிய 9 வகையான மரக்கறி கன்றுகள் என்பவற்றுடன் பச்சை மிளகாய், தக்காளி, கறி மிளகாய், பழ வகைகள், தென்னம் பிள்ளைகள், மருந்து செடிகள், அகத்தி உள்ளிட்ட பலவித கன்றுகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த திவிநெகமு தேசிய வேலைத் திட்டத்தின் முதல் ஐந்து கட்டங்களும் பெருவெற்றி அளித்தது தெரிந்ததே.
இதேவேளை திவிநெகும தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் கடந்த மூன் றரை வருட காலப் பகுதியில் நாட்டில் 450 கோடி ரூபாவுக்கும் மேல் பொருளாதார செயற்பாடு இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது என்றார்.
இந்நிகழ்வு திவிநெகும உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம சேவகர் ஆகியோரின் தலைமையில் மன்னாரிலுள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் நடாத்தப்பட்டது.