Breaking
Mon. Dec 23rd, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்பு செயலாளராக என்னை நியமித்த கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் கட்சியின் தவிசாளர் அமீர்அலி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜவாத் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கல்முனையைச் சேர்ந்த ஜவாத் அப்துர் ரஸ்ஸாக், தனக்கான நியமனக் கடிதத்தை கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

இத்தெரிவிற்கு இசைவாக இருந்த கட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் மற்றும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிதனை தெரிவிக்கிறேன்.

இது ஒரு அமானிதம். மறுமைக்கு பயந்து இதனை பாதுகாப்பேன். எனது இப்பணிப் பயணத்தில் ஆளுமையும், ஆற்றலும், உண்மையும், இறைவனுக்கு மட்டுமே பயந்து பணி செய்ய விரும்பும் சமூக சிந்தனை சிற்பிகளை கட்சி வேற்றுமைகளை களைந்து அழைக்கிறேன். எனக்கு வழி காட்டுங்கள்.

ஒவ்வொரு மனிதனிடத்திலும் சமுக நலக்கருத்துக்கள் மறைந்து கிடக்கின்றன. அவை வெளியாக்கப்பட வேண்டும். ஒன்று திரட்டப்பட வேண்டும். இத்திரட்டுக்களே அச் சமூகத்தின் கொள்கை ஆகும் என்று கூறினார்.

(ன)

 

 

Related Post