அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக்கின் சொந்த நிதியோடு மேலும் அவரின் உறவினர்கள், நண்பர்களிடம் நிதி சேர்த்து ஒரு வீட்டினை அமைத்துக்கொடுக்கும் ஏற்பாட்டின் அடிப்படையில், அவ்வீட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வீட்டின் உரிமையாளரினால் (28) ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கையில்,
ஏழைகளுக்கான உதவிகளை மேற்கொள்ள ஓர் பொதுவான அமைப்பு ஒன்று அத்தியவசியமாகும். இவ்வாறான அமைப்புக்கள் எமது தொகுதியில் குறைவு. அதிலும் எம் சமூகத்திற்கு உதவிகள் கிடைக்கப்பெறுவதும் மிகவும் குறைவு.
புத்தளம் மாவட்டத்தின் புழுதிவயல், நல்லாந்தலுவை, விருதோடை போன்ற பகுதிகளில் உள்ள பல ஏழைகளின் வீடுகளின் நிலையினை கண்டு கண்கலங்கினேன். இவர்களுக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க அயராது உழைத்தேன். அதன் விளைவாக கடந்த வாரம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் தனது காணியை வீட்டுத்திட்டம் அமைக்கத் தருவதாக வாக்குறுதியளித்தார். அதனைத்தொடர்ந்து, வீட்டுத்திட்டம் ஒன்று கிடைப்பதற்கான முயற்சிகள் வெற்றியளிக்கும் தருவாயில் உள்ளன.
அது ஒருபுறம் சந்தோசத்தையளித்தாலும் புத்தளம், கல்பிட்டி,அக்கரைப்பற்று, முந்தல் பிரதேசம் என முழு புத்தளம் தொகுதி மக்களின் அவலநிலையை போக்க வேண்டும். கட்சிகளால் பிரிந்து நிற்கும் சமூக எண்ணம்கொண்ட அரசியல்வாதிகள், தனவந்தர்கள் கைகோர்த்து ஒற்றுமையுடன், ஓர் சமூகசேவை அமைப்பை உருவாக்கி, நடாத்திச் செல்ல ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேலும், ஊடகங்களின் ஊடாக தகவலைப் பகிர்ந்து தற்போது அடிக்கள் நாட்டப்பட்ட இவ்வீட்டிற்கு உதவ நினைக்கும் தனவந்தர்கள், என்னை தொடர்புகொண்டால் உரிமையாளரை நான் அறிமுகம் செய்து வைக்கின்றேன். உங்கள் உதவிகளையும் அவர்களுக்கு வழங்குங்கள்.
தயவு செய்து இதனை அரசியல் இலாபத்திற்காக விமர்சித்து இச்செயற்பாட்டை வழு இழக்கச் செய்துவிடாதீர்கள். சமூக சேவையாக எண்ணி வழுப்படுத்துங்கள் எனவும் வேண்டினார்.
(ப)