சமூக வலைத்தளங்களில் தனி நபரை இழிவுபடுத்தும் வகையிலான பதிவேற்ற ங்களுக்கு எதிராக புதிய சட்டமொன்றை அரசாங்கம் கொண்டுவரவுள்ளதாக நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும் வழக்குகளின் காலதாமதத்தை குறைப்பதற்கு விசேட நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கவுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.நீதி அமைச்சில் நேற்று இடம்பெற்ற சட்டம் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுக்க ளின் பிரதிநிதிகளுடனான கூட்டத்தொட ரின் பின்னரே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையில் புதிய சட்டங்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதேபோன்று அமுலிலுள்ள சட்டதிட்டங்களை மறுசீரமைக்கும் வேலை திட்டங்களும் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறன.
அத்தோடு தற்போது அதிகளவிலான வழக்குகள் மிகவும் காலதாமதம் அடைவ தினால் குறித்த வழக்குகளை துரிதப்படுத்துவதற்கு அவசர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவற்றில் மிகவும் முக்கியமான வழக்குகளுக்கு விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் சட்டம் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் ஆராயப்பட்டது.
அத்தோடு தற்போது அதிகளவில் சமூக வலைத்தளங்களில் தனி நபரொருவரை இழிவுபடுத்தும் முகமான பல்வேறு பதவி யேற்றல்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. இதன்படி இவ்வாறான பதிவேற்றங்களை முன்னெடுப்போருக்கு எதிராக புதிய சட்டமொன்றை அரசாங்கம் கொண்டு வரவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளையும் நாம் முன்னெடுக்கவுள்ளோம்.மேலும் மோட்டார் வாகன திணைக்கள த்திற்கான. சட்டதிட்டங்களிலும் திருத்தங் கள் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள் ளோம் என்றார்.