Breaking
Sun. Mar 16th, 2025

சம்பளத்துடன் இணைத்து மேலும் பல கொடுப்பனவுகளை புகையிரத தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன.

இதேவேளை 10,000 ரூபாய் சம்பளம் உள்ளிட்ட மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு புகையிரத திணைக்களம் இதுவரை வழங்க முன்வராமை குறித்து புகையிரத தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

தமது கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படாத பட்சத்தில் தமது சங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும் என புகையிரத தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டாளரான ஜானக பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமது கொடுப்பனவுகள் அதிகரிப்பை அமைச்சரவை அங்கீகரித்துள்ள போதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காமல் உள்ளதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

எனவே குறித்த விடயத்தில் தமக்கு உடனடி தீர்வு கிடைக்கவில்லையாயின் தமது தொழிற்சங்கமானது கடும் நடவடிக்கை எடுக்கும் எனவும் ஜானக பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

By

Related Post