Breaking
Tue. Jan 14th, 2025

சம்மாந்துறை என்பது 45 000 இற்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட ஒரு பிரதேசம். இதில் 7000 தமிழ் மக்களது வாக்குகள் உள்ளன. முஸ்லிம் வாக்குகள் 38,000 உள்ளன. இத்தனை பெரும் வாக்கு வங்கியை கொண்ட சம்மாந்துறை மண் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழப்பதென்பது மிகவும் கவலையான விடயம். எமது வேட்பாளர்கள் ஒன்றும் ஏனைய ஊர் வேட்பாளர்களுக்கு எதிலும் சளைத்தவர்களுமல்ல.

இம் முறை அ.இ.ம.கா குறைந்தது ஒரு ஆசனத்தையாவது பெறக் கூடிய வாய்ப்புள்ளது. அந்த ஆசனத்தை நோக்கி நாம் காய் நகர்த்த முடியுமா என்பதை இக் கட்டுரையினூடாக பார்ப்போம். அ.இ.ம.காவில் வெற்றி பெற தேவையான வாக்காக எதிர்பார்க்கப்படுவது வெறும் 15,000 அளவான வாக்குகளே! இதனை சிலருக்கு ஏற்க மனம் தயங்கலாம். இது பற்றி விளக்குவது கட்டுரையை நீண்டிவிடும்.

2015ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் த.தே.கூ 45,000 அளவான வாக்குகளை அம்பாறை மாவட்டத்தில் பெற்றிருந்தது. இதில் பா.உறுப்பினராக தெரிவான கோடீஸ்வரனின் வாக்கு 17,779 ஆகும். இதே நிலையே இம் முறை அ.இ.ம.காவிலும் இருக்கும். எனவே, அ.இ.ம.காவில் வெற்றிபெற தேவையான ஒருவருக்கான வாக்கு 15,000 அளவானதாக இருக்கும் என்பதை நாம் இவ் விடயத்தோடு ஒப்பிட்டு நோக்கும் போது அறிந்துகொள்ள முடியும் என சுருக்கமான நிறுவுகிறேன்.

சம்மாந்துறையில் உள்ள 38 ,000 முஸ்லிம் வாக்குகளில் 74 வீதமளவான வாக்கே அளிக்கப்படும். 74 வீதம் என்பது 28,120 வாக்குகளாகும். இதில் 15,000 (அ.இ.ம.காவில் வெற்றி பெற தேவையான வாக்காக எதிர்பார்க்கப்படுவது) என்பது 54.34 வீதமே. நன்றாக சிந்தியுங்கள், அளிக்கப்படும் வாக்குகளில் 54.34 வீதமளவான வாக்கை சம்மாந்துறை மக்கள் மு.மா.ச.உறுப்பினர் மாஹிருக்கு வழங்கினால் எவ்வித சந்தேகமுமின்றி அவரது வெற்றியை உறுதி செய்துகொள்ள முடியும். இது சம்மாந்துறை பிரதிநிதித்துவ காப்பிற்கான இலகு வழியாக தெரியவில்லையா…? இந்த 15,000 என்பது ஏனைய ஊர்களுக்கு அளிக்கப்படும் மொத்த வாக்குகளாக இருக்கும். எமக்கு வெறும் 54.34 வீதமான வாக்குகளே!

சம்மாந்துறை வாக்குகள் தவிர்ந்து மு.மா.ச.உறுப்பினர் மாஹிர் வெளியூர் மக்களது வாக்குகளையும் இலகுவாக பெறக் கூடிய சாத்தியமுள்ளது. சாய்ந்தமருது அவரது மனைவியின் ஊர். அங்கு அ.இ.ம.காவுக்கு அளிக்கப்படும் வாக்குகளில் மு.மா.ச.உறுப்பினர் மாஹிருக்கு ஒரு மனாப்பு இருக்கும். கல்முனை, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களிலும் அவரது நேரடி குடும்ப உறவுகள் உள்ளன. இது தொடர்பில் நான் விரிவாக விபரிக்க விரும்பவில்லை. குடும்ப உறவு வாக்குகள் என்பது நிச்சயப்படுத்தப்பட்டதாக இருக்கும்.

அதே போன்று நாவிதன்வெளி, இறக்காமம், மாவடிப்பள்ளி, வரப்பத்தாஞ்சேனை ஆகிய ஊர்களில் மு.மா.ச.உறுப்பினர் மாஹிருக்கான ஆதரவை அவதானிக்க முடிகிறது. இது தவிர்ந்த ஏனைய பிரதேசங்களிலும் ஒரு குறித்தளவான ஆதரவை காணக் கூடியதாக உள்ளது. மு.மா.ச.உறுப்பினர் மாஹிர் ஆகக் குறைந்தது 5000 வெளியூர் வாக்கையாவது பெறுவார். இதனை யாரும் மறுக்க முடியாது. யாரும் மறுத்து விடக் கூடாது என்பதற்காகவே 5000 என்ற சிறிய எண்ணிக்கையை குறிப்பிட்டுள்ளேன்.

ஆகக் குறைந்த வெளியூர் வாக்குகளையும் கருத்தில் கொண்டு அவரது வெற்றியை சிந்தித்தால், 10,000 வாக்குகள் (மயிலில் வெற்றிக்காக எதிர்பார்க்கப்படும் 15,000 வாக்கிலிருந்து மு.மா.ச.உறுப்பினர் மாஹிரால் வெளியூரில் ஆகக் குறைந்தது பெற முடியுமான 5000வாக்குகளை கழித்தால் 10,000 வாக்குகள் வரும்) சம்மாந்துறையில் கிடைத்தாலும் வெற்றியீட்ட முடியும். 10,000 வாக்குகள் என்பது சம்மாந்துறையில் அளிக்கப்படும் வாக்குகளில் 35.56 வீதமே. நன்றாக சிந்தியுங்கள், இது சம்மாந்துறை பிரதிநிதித்துவ காப்பிற்கு மிக இலகுவான வழியாக தெரியவில்லையா?

உண்மையில் மு.மா.ச.உறுப்பினர் மாஹிரால் 8000 இற்கும் மேற்பட்ட வாக்குகளை வெளியூரில் இருந்து பெற முடியும் என நம்பப்படுகிறது. இவ்வாறு நோக்கும் போது சம்மாந்துறையில் இருந்து வெறும் 7000 வாக்குகளை பெற்றால் கூட மு.மா.ச.உறுப்பினர் மாஹிர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது. 7000 வாக்குகள் என்பது சம்மாந்துறையில் அளிக்கப்படும் வாக்குகளில் வெறும் 24.89 வீதமே! சிந்தியுங்கள் இதனை விட சம்மாந்துறையின் பிரதிநிதித்துவ காப்பிற்கு இலகு வழியுள்ளதா?

நான் மேலே கணக்கு காட்டியுள்ளது 15,000 என்ற எல்லையை கருத்திற் கொண்டேயாகும். நாம் ஒரு 20,000 வாக்கை நோக்கி மு.மா.ச.உறுப்பினர் மாஹிரின் வாக்கை நகர்த்தினால், அதனை மயில் கட்சியை சேர்ந்த யாராலும் நெருங்க முடியாது. அவர் 20,000 வாக்கை பெறுவதற்கு வெளியூரில் அவரால் பெற முடியுமான ஆகக் குறைந்த வாக்கை (5000) வைத்து சிந்திக்கும் போது, சம்மாந்துறையில் 15,000 வாக்கை பெற வேண்டியிருக்கும். இந்த எண்ணிக்கை சம்மாந்துறையில் அளிக்கப்படும் வாக்குகளில் 54.34 வீதமேயாகும். அவர் வெளியூரில் பெறச் சாத்தியமான (8000) வைத்து சிந்தித்தால் சம்மாந்துறையில் 12,000 வாக்கை பெற வேண்டியிருக்கும். இந்த எண்ணிக்கை சம்மாந்துறையில் அளிக்கப்படும் வாக்குகளில் 42.27 வீதமேயாகும். நான்றாக சிந்தியுங்கள், இது இலகு வழியாக தெரியவில்லையா?

எந்தெந்த வழிகளில் எல்லாம் சிந்திக்க முடியுமோ அத்தனை வழிகளிலும் ஆராய்ந்துள்ளேன். மு.மா.ச.உ மாஹிரின் வெற்றியானது சம்மாந்துறையில் இருந்து அளிக்கப்படும் வாக்குளில் 24.89 வீதம் அளிக்கப்பட்டாலே சாத்தியமாகும் என்பதையும், அவரை யாருமே நெருங்க முடியாத எல்லைக்குள் கொண்டு செல்ல சம்மாந்துறையில் அளிக்கப்படும் வாக்குகளில் 54.34 வீதம் அவருக்கு போதுமானதாகும் என்பதையும் எவ்வித சந்தேகமுமின்றி அறிந்துகொள்ள முடியும். இது ஒன்றும் சாத்தியமற்ற இலக்கல்ல.

இம் முறை சம்மாந்துறையிலிருந்து குறைந்தது 15 000 வாக்குகளையாவது வழங்கி, மயில் கட்சியில் யாருமே நெருங்க முடியாத வாக்கு எல்லைக்குள் மு.மா.ச.உறுப்பினர் மாஹிரை கொண்டு சென்று, சம்மாந்துறையின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய முடியும். நான் இங்கே குறிப்பிட்டடுள்ள வாக்கு எண்ணிக்கை சம்மாந்துறையில் அழிக்கப்படும் வாக்குகளில் வெறும் 54.34 வீதமேயாகும்.

இந்த இலகு வழியை விட்டு, வேறு வழிகளை சிந்திப்போமாக இருந்தால், இம் முறை சம்மாந்துறையின் பிரதிநிதித்துவத்தை எவ்வித சந்தேகமுமின்றி இழக்க நேரிடும். ஏனைய கட்சிகளில் இருந்து சம்மாந்துறை பிரதிநிதித்துவத்தை காப்பதற்கான எவ்வித சாத்தியங்களுமில்லை. முடிந்தால், ஆதரங்களோடு நிறுவட்டும். ஏனைய கட்சிகளால் சம்மாந்துறை பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற முடியாது என்ற விடயத்தை என்னால் தெளிவாக வரலாற்று ஆதரங்களோடு நிறுவ முடியும். நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்.

சம்மாந்துறை மக்களே!
சிந்தித்து எமது பிரதிநிதித்துவத்தை காப்போம்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

Related Post