மக்கள் நலன் கருதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் சம்மாந்துறையில் ‘அரச ஒசுசல’ ஒன்றினை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இது தொடர்பாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை அண்மையில் சந்தித்து க் கலந்துரையாடிய இஸ்மாயில் எம்.பி, சாம்மாந்துறை பிரதேசத்தில் “அரச ஒசுசல” ஒன்றை அமைப்பதற்கான தேவைப்பாடு குறித்தும் சுட்டிக்காட்டினார்.
மேலும், சம்மாந்துறை பிரதேசத்தில் ‘அரச ஒசுசல’ ஒன்று இல்லாதது பெரும் குறையாகவே உள்ளது. இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் பல்வேறுபட்ட நோய்களுக்கு உள்ளாகுவதோடு, அவர்களுக்கு தேவையான மருந்துப் பொருட்களை பெருமளவில் தனியார் பாமசிகளிலேயே கொள்வளவு செய்கின்றனர். இதற்குப் பெருமளவு பணமும் தேவைப்படுகின்றது. இதனால் மக்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்றும் சுகாதார அமைச்சரிடம் எடுத்துரைத்தார்.
இதனைக் கேட்டறிந்துகொண்ட அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து, விரைவில் ஒசுசல அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.
(ன)